தமிழகத்தில் வாக்குப்பதிவு மையங்களை கைப்பற்ற வாய்ப்பே இல்லை; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
தமிழகத்தில் வாக்குப்பதிவு மையங்களை கைப்பற்றும் சம்பவங்கள் நடைபெற வாய்ப்பே இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்து உள்ளார்.
சென்னை,
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட புகார்களுக்கு 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
வாக்குப்பதிவு மையங்களை கைப்பற்றுதல் என்பது தமிழகத்தில் நடைபெற வாய்ப்பே இல்லை என கூறிய அவர், தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட்டு வருகிறது.
அதனால் ஜனநாயகத்தை பலப்படுத்த 100% வாக்குப்பதிவை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும் என வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.