எடப்பாடியை எதிர்க்கும் அரசியல் இயக்கம் ‘டெட்பாடி’ ஆகிவிடும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி

எடப்பாடியை எதிர்க்கும் அரசியல் இயக்கம் ‘டெட்பாடி’ ஆகிவிடும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

Update: 2019-04-08 21:30 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,

எடப்பாடியை எதிர்க்கும் அரசியல் இயக்கம் ‘டெட்பாடி’ ஆகிவிடும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

மேல்முறையீடு

8 வழிச்சாலை திட்டத்துக்கு ஐகோர்ட்டு தடை விதித்ததை அரசுக்கு பின்னடைவு என்று கருதக்கூடாது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யும். தொழில் துறை வளர்ச்சிக்கு சாலை வசதி மிகவும் அவசியம். அடுத்த கட்டமாக கூட்டணி கட்சி தலைவர் களை அழைத்து பேசி, யாருக்கும் பாதிப்பு ஏற்படாத அளவுக்கு முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார்.

எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல, விஷ வாயு என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். எடப்பாடியை எதிர்க்கும் அரசியல் இயக்கம் ‘டெட்பாடி’ ஆகிவிடும்.

திறமை இல்லை

எழுதி கொடுத்த பேப்பரை பார்த்துதான் ஸ்டாலின் படிப்பார். சட்டமன்றத்திலும் எழுதி வைத்து பேசுவார். கலைஞரிடம் இருந்த திறமை கடுகளவு கூட ஸ்டாலினிடம் இல்லை. தி.மு.க.வின் தலைவராக சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஸ்டாலின் ஆகிவிட்டார்.

கருத்துக்கணிப்பை தாண்டி, மக்கள் கணிப்பு வைத்துள்ளனர். மக்களின் கணிப்பு அ.தி.மு.க.தான். மோடி பிரதமராக வர வேண்டும், தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்