தமிழகத்தில் இதுவரை ரூ.285.86 கோடி பறிமுதல் - தேர்தல் ஆணையம் தகவல்
தமிழகத்தில் இதுவரை ரூ.285.86 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
மக்களவை தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக ஆவணமில்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்டதாக இதுவரை ரூ.1,618 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் ரூ.285.86 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.