எனது கருத்து சுதந்திரத்தில் தலையிட பா.ஜனதாவுக்கு அதிகாரம் கிடையாது தமிழிசைக்கு கனிமொழி பதிலடி

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் தூத்துக்குடியில் நேற்று நடந்தது.

Update: 2019-03-23 19:30 GMT
தூத்துக்குடி,

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் தூத்துக்குடியில் நேற்று நடந்தது. இதில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு பேசியதாவது:-

நாட்டில் கருத்து சுதந்திரம் இல்லை என்றால் கனிமொழி பேச முடியுமா? என்று பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டு உள்ளார். கனிமொழி பேசுவதற்கு உரிமை நீங்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இது பெரியார், அண்ணா பெற்றுத்தந்த உரிமை. இதில் கை வைக்கக்கூடிய அதிகாரம் பா.ஜனதாவுக்கு கிடையாது. என்னுடைய கருத்து சுதந்திரத்தை பற்றி நான் பேசவில்லை. மாணவி சோபியாவின் கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டதே? அதைப்பற்றி கேட்கிறேன். இந்த நாட்டில் பா.ஜனதாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அரசியல்வாதிகள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்களை கீழ்த்தரமாக விமர்சித்த ஒருவர் எந்த தைரியத்தில் தூத்துக்குடியில் வேட்பாளராக நிற்கிறார். பா.ஜனதா எப்படி நம் சுயமரியாதையை தட்டி எழுப்புகிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்