சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி: நாளை கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கம்
சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதையடுத்து நாளை கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
சென்னை,
8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட்கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஒரு வாரம் முன்பே சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதையடுத்து நாளை கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில்,
* நாளை சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே 10.50 மணிக்கும், வேளச்சேரி - சென்னை கோட்டை இடையே 11.25 மணிக்கும் ரயில்கள் இயக்கப்படும்.
* மார்ச் 31ம் தேதி சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இரவு 11.45 மணிக்கும், வேளச்சேரி - சென்னை கடற்கரை இடையே இரவு 11.25 மணிக்கும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.