மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்திய குடியரசு கட்சி கூட்டணி - செ.கு.தமிழரசன் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்திய குடியரசு கட்சி கூட்டணி என செ.கு.தமிழரசன் அறிவித்துள்ளார்.;

Update: 2019-03-19 14:02 GMT
40 மக்களவை தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளில் தனியாக போட்டியிட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தயாராகி வந்தது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியுடன், இந்திய குடியரசு கட்சி கூட்டணி அமைக்கிறது. 

மக்களவை தேர்தலில் 1 தொகுதியிலும், இடைத்தேர்தலில் 3 தொகுதிகளிலும் இந்திய குடியரசுக் கட்சி போட்டியிட உள்ளது. மேலும் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிட உள்ளதாக செ.கு.தமிழரசன் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்