ஈரோடு மக்களவை தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு மக்களவை தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

Update: 2019-03-16 03:09 GMT
சென்னை,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பிடித்துள்ள மதிமுவுக்கு ஒரு மக்களவை தொகுதியும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மக்களவை தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 இந்த நிலையில், ஈரோடு மக்களவை தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அ.கணேசமூர்த்தி ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடுவார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். அ.கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளர் பொறுப்பை வகித்து வருகிறார். வரும் 19 ஆம் தேதி அ.கணேசமூர்த்தி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்