சமூக ஊடகங்களால் பெண்களை வேட்டையாடுவது, வளர்ந்துவரும் அச்சுறுத்தல் - சித்தார்த்
சமூக ஊடகங்களால் பெண்களை வேட்டையாடுவது வளர்ந்துவரும் அச்சுறுத்தல் என சித்தார்த் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களால் பெண்களை வேட்டையாடுவது வளர்ந்துவரும் அச்சுறுத்தல் என சித்தார்த் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சியில் கல்லூரி, பள்ளி மாணவிகளை ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி நெஞ்சை உடைய செய்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் கடுமையான எதிர்ப்பையும், கண்டங்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.
நடிகர் சித்தார்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன். அப்போதுதான் அவர்களால் முன்வந்து பேசி, குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கை வலுப்படுத்த முடியும். சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பெண்களை வேட்டையாடுவது, வளர்ந்துவரும் அச்சுறுத்தல். அதற்கு எதிராக நாம் பாதுகாப்பு கொடுக்கவேண்டும்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தக் கொடிய அரக்கர்களை நான் கடுமையாக கண்டிக்கிறேன். மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து, பாலியல் கொடுமைப்படுத்திய வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது. இவர்களைப் பொது வெளியில் நடமாட விடுவது சமூகத்திற்குப் பேராபத்து என ஜீ.வி.பிரகாஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.