3 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மக்களவை தேர்தலுடனேயே சேர்த்து தேர்தல் நடத்திட வேண்டும் - திமுக தீர்மானம்

அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மக்களவை தேர்தலுடனேயே சேர்த்து தேர்தல் நடத்திட வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2019-03-11 06:40 GMT
சென்னை,

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், 

* 18 தொகுதிகளுடன் மீதமுள்ள 3 தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த வேண்டும்.

* வழக்குகளை காரணம் காட்டி தேர்தல் அறிவிக்கப்படவில்லை என கூறுவதில் எந்த முகாந்திரமும் இல்லை.

* அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடத்த வேண்டும்.

* ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்ற தீர்ப்பால் இறுதிக்கு வந்து விட்டது.

* 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முன் வராவிட்டால், நீதிமன்றம் மூலம் இந்த 3 தொகுதிகளின் தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்