பிரேமலதாவின் கருத்து அனைவராலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது -முதலமைச்சர் பழனிசாமி பேட்டி
பிரேமலதாவின் கருத்து அனைவராலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
கோவை விமானநிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அரசின் திட்டங்களை நிறைவேற்றவே பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தேர்தல் பிரச்சாரத்திற்காக இல்லை. இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமான காங்கிரசுடன் திமுக கூட்டணி அமைத்தது தலைகுனிவு.
பாஜகவுடன் கூட்டணியில் இருந்து பதவி சுகத்தை அனுபவித்து திமுகவினர் தற்போது எதிர்த்துபேசுகிறார்கள். கூட்டணி தொடர்பாக தேமுதிகவுடன் பேசிக்கொண்டிருக்கிறோம். நாட்டின் குடிமகன் என்ற அடிப்படையில் கே.சி.பழனிசாமி என்னை சந்தித்தார். ஊழல் பற்றி ஆதாரத்துடன் திமுக பேச வேண்டும் ஆதாரம் இருக்கிறதா? பிரேமலதாவின் கருத்து அனைவராலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.