சென்னை விமான நிலையத்தில் 86-வது முறையாக கண்ணாடி விழுந்து நொறுங்கியது

சென்னை விமான நிலையத்தில் 86-வது முறையாக கண்ணாடி விழுந்து நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-03-09 10:59 GMT
சென்னை,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 

சென்னை விமான நிலையத்தில், அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மேற்கூரை இடிந்து விழுவது  வாடிக்கையாகி விட்டது.  கண்ணாடி உடைந்து விழும் எண்ணிக்கை சதத்தையும் தொட்டு விடும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் உள்நாட்டு முனையத்தின் 4-வது நுழைவு வாயிலின் மேற்கூரை பகுதியில் இருந்து கண்ணாடி விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடைந்து விழுந்த கண்ணாடி சிதறல்களை அகற்றினார்கள்.

அந்த பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.  கண்ணாடி விழுந்தது பற்றி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். 

மேலும் செய்திகள்