அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்பு ஓ.பன்னீர்செல்வம் தகவல்

அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-07 18:50 GMT
தேனி, 

பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது ஓ.பன்னீர்செல்வத்திடம் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தையின் தற்போதைய நிலைமை குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், ‘அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் வந்து இணைவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன’ என்றார். அதைத்தொடர்ந்து தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடக்கிறதா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘நிறைய கட்சிகள் வந்து சேர்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன’ என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்