கர்ப்பிணிகளுக்கு இலவசமாக இரும்பு சத்துள்ள மருந்துகளை வழங்க வேண்டும் - அமைச்சர் விஜயபாஸ்கருக்கு திவ்யா சத்யராஜ் கடிதம்
கர்ப்பிணிகளுக்கு இலவசமாக இரும்பு சத்துள்ள மருந்துகளை வழங்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கருக்கு திவ்யா சத்யராஜ் கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை,
நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எழுதி உள்ள கடிதத்தில்,
பெண்களின் இரும்பு சத்து குறைபாட்டை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு இலவசமாக இரும்பு சத்துள்ள மருந்துகளை வழங்க வேண்டும். இரும்புச்சத்து குறைபாடு கர்ப்பிணிக்கு மட்டுமின்றி பிறக்கும் குழந்தைக்கும் ஆபத்தானது என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.