ரூ.2000 சிறப்பு நிதி தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம்- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

ரூ.2000 சிறப்பு நிதி தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு கூறினார்.

Update: 2019-03-07 07:51 GMT
சென்னை,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் பணியில் 3 லட்சத்து 36 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர். வாக்காளர் பட்டியலில் சேர்க்க புதிதாக 10 லட்சத்து 14 ஆயிரத்து 888 விண்ணப்பங்கள்  வந்துள்ளது.

தமிழகத்தில் 67,664 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. மேலும் புதிய வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்படும்.

மக்களவை தேர்தலோடு இடைத்தேர்தல் வந்தால், வாக்குச்சாவடிகளில் இடைத்தேர்தலுக்கென தனியாக ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும்.

 ரூ. 2000 சிறப்பு நிதி தொடர்பாக தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம் என கூறினார்.

மேலும் செய்திகள்