சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் -பிரதமர் மோடிக்கு மு.க.அழகிரி கோரிக்கை
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மு.க.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை,
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என்று அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பரில் கடிதம் எழுதினார். இக்கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது.
இப்போது சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் எம்.ஜி.ஆர்.பெயரில் அழைக்கப்படும் என்று சென்னை கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டணிக்கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டி பெருமைப்படுத்தியதற்கு நன்றி. எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மு.க.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.