தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில் விருதுநகர் பேரணி அமையும் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில் 6-ந் தேதி நடக்கும் விருதுநகர் பேரணி அமையப் போகிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
போர் முரசு ஒலிக்கின்ற நாள்தான், நாட்டையும் மக்களையும் நாள்தோறும் காக்கும் வீரனுக்கு நல்ல நாள், திருநாள். தி.மு.க.வின் கோடிக்கணக்கான செயல் வீரர்கள் அந்தத் திருநாளுக்காக கண் இமைக்காமல் காத்திருக்கிறார்கள். ஜனநாயக களம் தயாராகிவிட்டது. வெற்றி ஒன்றேதான் நமக்கு இலக்கு. இந்த வெற்றி நமக்கானதல்ல, நம் தமிழ்நாட்டுக்கு, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இந்தியத் திருநாட்டுக்கு.
5 ஆண்டுகாலம் இந்தியாவை ஆட்சி செய்த நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணியின் கொடுங்கோண்மை ஆட்சியில் நாடு பட்ட பாட்டிலிருந்து மீட்கவும், அந்தக் கொடுங்கோல் ஆட்சிக்கு அடிமைச் சேவகம் செய்து தமிழ்நாட்டையே அடமானம் வைத்து, இன்றைக்கு அவர்களுடனேயே கூட்டணி கண்டுள்ள அ.தி.மு.க. ஆட்சியிலிருந்து தமிழ்நாட்டின் மானத்தை மீட்டு, அதலபாதாளத்திலிருந்து விடுவிக்கவும் ஜனநாயக களமான நாடாளுமன்ற தேர்தல், தி.மு.க. தொண்டர்களை பட்டாளத்து சிப்பாய்களாக மாற்றியிருக்கிறது.
2 ஆட்சியாளர்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் பேரணி விருதுநகரில் 6-ந் தேதி நடைபெறவிருக்கிறது. உங்களின் ஒருவனான நான் அன்புடன் அழைக்கிறேன். நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். உங்களை முன்னால் விட்டு பின்னால் வருபவன் அல்ல நான். உங்களோடு ஒருவனாக உங்களில் ஒருவனாக உங்களால் ஒருவனாக, உயிர் மூச்சான தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பை தோள் மீது சுமந்து, ஜனநாயக நெறிமுறைகளின் வெளிச்சத்தில் பயணிக்கிறேன்.
தோழமை சக்திகளுடன் இணைந்து காணப்போகும் மகத்தான வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில் விருதுநகர் பேரணி அமையப் போகிறது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த நம்மைவிட ஆவலாகவும், வேகமாகவும் இருக்கும் பொதுமக்களும் பங்கேற்கும் பெரும் பேரணியை விருதுநகர் தனது வரலாற்றுப் பக்கங்களில் 6-ந் தேதி பதிய வைக்கப்போகிறது.
பேரறிஞர் அண்ணா கண்ட இயக்கம்; குணாளா, குலக் கொழுந்தே என்று அண்ணாவினால் பாசம்பொங்க அழைக்கப்பட்ட, பெருந்தலைவர் காமராஜரைத் தந்த விருதுநகரில் கூடுகிறது. காலத்தின் தேவை கருதி நாட்டின் நலனில் அக்கறை கொண்டு தி.மு.க.வும், காங்கிரஸ் பேரியக்கமும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு செய்துகொண்ட நிலையில், தோழமைக் கட்சியினருடனான இணக்கமான உடன்பாடு விரைந்து நிறைவேற உள்ளது. இது ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற சிறுபான்மை நலன் காக்கின்ற ஒடுக்கப்பட்டோர் உரிமையைப் பாதுகாக்கின்ற யாரையும் ஒதுக்கி வைக்காத, எல்லோருக்குமான சமத்துவத்தை வலியுறுத்துகிற கொள்கைக்கூட்டணி; மக்கள் கூட்டணி; வெற்றிக் கூட்டணி.
நாம் தேர்தல் நேரத்தில் மட்டும் கூடுபவர்கள் அல்லர். கருணாநிதி குறிப்பிட்டதைப் போல், நாம் கூடிக் கலையும் காகங்கள் அல்ல; கூடிப் பொழியும் மேகங்கள். எப்போதும் மக்கள் பக்கமே நிற்போம்; மக்களைச் சுற்றியே வருவோம். மாநாடுகள் கூட்டி கொள்கை முழக்கம் செய்திடுவோம். அப்படித்தான், 2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21, 22 தேதிகளில் தென்மண்டல தி.மு.க. மாநாடு இதே விருதுநகரில் நடைபெற்றது.
அந்த மகத்தான தென் மண்டல மாநாட்டுக்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளை வென்று, நாட்டின் வரலாற்றில் சாதனைப் பொன்னேட்டை இணைத்தது. அப்போதும் மாநிலத்தை ஆட்சி செய்த அ.தி.மு.க.வும், மத்தியில் ஆட்சி செய்த பா.ஜ.க.வும் இப்போது போலவே கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அப்போது தமிழ்நாட்டு மக்கள் எப்படி நாற்பது தொகுதிகளிலும் இரண்டு ஆட்சியாளர்களையும் வீழ்த்தி, மத்தியில் ஆட்சி மாற்றத்தையும் அதனைத் தொடர்ந்து மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தையும் உருவாக்கிக் காட்டினார்களோ, அதே வரலாறு இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் உறுதியாகத் திரும்பும். தொண்டர்களே, ஒன்று கூடிடுவோம், விருதுநகரில் ஒலிக்கப்போகும் ஜனநாயகப் போர் முரசம் நாற்பது தொகுதிகளுக்குமான வீர முரசம், அதுவே வெற்றி முரசம் இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.