வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கே ரூ.2000 - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகம் வளர்ச்சிப் பாதையில் சென்று முன்னேறிய மாநிலமாக உள்ளது என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கரூர் மாவட்டம் ஆண்டாங்கோவில் பகுதியில் 5 கோடியே 77 லட்சம் ரூபாயில் நலத்திட்டங்களை துவக்கி வைத்த அவர், செய்தியாளர்களிடம் இதனை கூறினார். மேலும் ,2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.