கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2019-03-03 04:53 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரியின் மேற்கு கடலோர பகுதியில் குளச்சல் அருகே மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது.  பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படும் இந்த கோயில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதற்கு முன், மூலஸ்தானத்தில் இருந்து திருக்கொடி மேளதாளத்துடன் கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் புனித நீர் தெளிக்கப்பட்டது.  இதன்பின் கொடியேற்றப்பட்டு பூஜைகளும் நடந்தன.

இதில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இதேபோன்று பல்வேறு நகரங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்ள வந்துள்ளனர்.  இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள்.  கோவில் திருவிழாவையொட்டி பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபடுகின்றனர்.

மேலும் செய்திகள்