எங்கள் கட்சி இடம்பெறும் கூட்டணியே தேர்தலில் வெற்றிபெறும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநாட்டில் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேச்சு
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடம்பெறும் கூட்டணியே இனிவரும் தேர்தல்களில் வெற்றிபெறும் என உலக கொங்கு தமிழர் மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
நாமக்கல்,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நேற்று நாமக்கல்லில் 2-ம் உலக கொங்கு தமிழர் மாநாடு நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் மாநாட்டு திடலில் கொடி ஏற்றிவைத்து நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்தார்.
மாநாட்டையொட்டி விவசாய கண்காட்சி, நாட்டு மாடுகள் கண்காட்சி, பழைய வாகனங்கள் கண்காட்சி, பாரம்பரிய விதைகள் கண்காட்சி ஆகியவை நடந்தது. மாநாட்டில் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசியதாவது:-
வருகிற நாடாளுமன்ற தேர்தல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு போர். அதில் ஜெயித்து தான் ஆகவேண்டும். இந்த மாநாடு நடக்கப்போகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு போர் முரசை கொட்டுகின்ற மாநாடு. யாருடன் கூட்டணிக்கு செல்கிறோம் என்பதில் தான் பிரச்சினை.
கூட்டணிக்கு தலைமை தாங்கும் பிரதான கட்சிகளுக்கு ஒரு அறைகூவலை விடுக்கிறோம். நீங்கள் ஒரு தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்குகிறீர்கள் என்று சொன்னால், குறைந்தபட்சம் ஒரு லட்சம் ஓட்டுகளாவது அந்த கட்சிக்கு அந்த தொகுதியில் இருக்க வேண்டும்.
தமிழகத்தில் தற்போது 2 பெரிய தலைவர்கள் கிடையாது. அப்படிபட்ட சூழ்நிலையில் இப்படி தொகுதியை ஒதுக்கினால் பிரதான கட்சியினரே அந்த கூட்டணி கட்சிக்கு வேலை பார்க்க மாட்டார்கள். அவர்களே தோற்கடித்து விடுவார்கள். எனவே அதை புரிந்துகொண்டு எந்த பிரதான கட்சியாக இருந்தாலும், ஓட்டு இல்லாத தொகுதியை ஒரு கட்சிக்கு ஒதுக்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். எல்லா கட்சிகளுக்கும் அது தான் நல்லது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை பொறுத்தவரை, ஜெயிக்கிற கூட்டணியில் தான் இருக்கும் என பல நேரங்களில் சொன்னது உண்டு. ஆனால் இனிவரும் தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எந்த கூட்டணியில் இருக்கிறதோ அந்த கூட்டணியே வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார்.