பேரறிஞர் அண்ணாவின் 50வது நினைவு நாள்; தி.மு.க. சார்பில் அஞ்சலி

பேரறிஞர் அண்ணாவின் 50வது நினைவு நாளை முன்னிட்டு தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2019-02-03 04:48 GMT
சென்னை,

தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சரான பேரறிஞர் அண்ணாவின் 50வது நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அண்ணா நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடந்தது.  இதன்பின்னர் தி.மு.க. சார்பில் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தி.மு.க.வின் மூத்த தலைவர் துரைமுருகன், முன்னாள் மந்திரிகள் டி.ஆர். பாலு, ஆ. ராசா, தயாநிதி மாறன் மற்றும் கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்