எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தை நிறுத்த தொடக்க கல்வி இயக்குநர் ஆணை

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தை நிறுத்த தொடக்க கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்.

Update: 2019-02-01 15:29 GMT

தொடக்க கல்வி துறை சார்பில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு மாண்டிசோரி அல்லது கிண்டர் கார்டன் பயிற்சி பெற்றவர்களையே நியமிக்க வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் இடைநிலை ஆசிரியர்களை எந்த அடிப்படையில் பணியமர்த்துகிறீர்கள்? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கும் அரசாணையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தை நிறுத்த தொடக்க கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி நியமனத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்