மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கிருஷ்ணன் நியமனம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.கிருஷ்ணணை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-12-31 14:15 GMT
சென்னை, 

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக எம்.கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை வேந்தராக எம்.கிருஷ்ணன்  நியமிக்கப்பட்டு இருப்பதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நியமனத்துக்கான ஆணையையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து எம்.கிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். பொறுப்பேற்றுக்கொண்ட நாளில் இருந்து 3 ஆண்டுகள் துணை வேந்தராக எம்.கிருஷ்ணன் பொறுப்பில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்