சிவாஜி கணேசனின் எத்தனையோ தத்துப் பிள்ளைகளில் தானும் ஒருவன் - கமல்ஹாசன்
சிவாஜி கணேசனின் எத்தனையோ தத்துப்பிள்ளைகளில் தானும் ஒருவன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகர் சிவாஜி கணேசனின் 91வது பிறந்த நாள் தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் அவரது உருவ படத்திற்கு துணை முதல் மந்திரி ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், பெஞ்சமின், மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், சிவாஜி கணேசனை புகழ்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் சிவாஜி கணேசனின் எத்தனையோ தத்துப் பிள்ளைகளில் தானும் ஒருவன் என்று பதிவிட்டுள்ளார். "என் நடிப்பின் தந்தைக்கு வணக்கம்" என கமல்ஹாசன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று, அய்யா நடிகர் திலகத்தின் பிறந்த நாள். அவரின் எத்தனையோ தத்து பிள்ளைகளில் ஒருவனாய்... என் நடிப்பின் தந்தைக்கு வணக்கம்.
— Kamal Haasan (@ikamalhaasan) October 1, 2018