இறுதித் தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதி தான் -அமைச்சர் ஜெயக்குமார்
சிபிஐ சோதனை குறித்த கேள்விக்கு இறுதித் தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதி தான் என அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார்.
சென்னை
சிபிஐ சோதனை குறித்த கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் குற்றவாளியா, இல்லையா என்பதை நீதிமன்றம்தான் இறுதித்தீர்ப்பில் சொல்லும்; அவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை.
இறுதித் தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதி தான். திமுகவில் தற்போது அதிகார போட்டி நடைபெற்று வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.