துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையமே விசாரணை நடத்த வேண்டும் பழ.நெடுமாறன் வலியுறுத்தல்

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையமே விசாரணை நடத்த வேண்டும் பழ.நெடுமாறன் வலியுறுத்தல்

Update: 2018-05-26 18:45 GMT
தூத்துக்குடி

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையமே விசாரணை நடத்த வேண்டும் என்று பழ.நெடுமாறன் வலியுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை பல்வேறு அரசியல் கட்சியினர் பார்த்து ஆறுதல் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் ஆஸ்பத்திரி வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

கடந்த 100 நாட்களாக நடந்த போராட்டத்தை மக்கள் அமைதியாக நடத்தினர். ஆனால் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முற்றுகை போராட்டம் அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. ஆலைக்கு எதிரான போராட்டம். இதில் நவீன ரக துப்பாக்கி வைத்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்–அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அப்போதுதான் நீதி விசாரணையை முறையாக நடத்த முடியும்.

தூத்துக்குடியில் உள்ள வெளிமாவட்ட போலீசார் உடனடியாக வெளியேற வேண்டும். தூத்துக்குடி மாவட்ட மக்கள் நகரில் அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும். துப்பாக்கி சூடு சம்பந்தமாக தமிழக அரசு நியமித்த ஒரு நபர் கமி‌ஷன் தேவையில்லை. அதற்கு பதிலாக தேசிய மனித உரிமை ஆணையமே விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்