தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து தே.மு.தி.க. 28-ந் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சென்னை,
தே.மு.தி.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய அ.தி.மு.க. ஆட்சியை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் வருகிற 28-ந் தேதி திங்கட்கிழமை, காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.