48 மணி நேரத்தில் குமரிக்கடலில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை உள்ளது

48 மணி நேரத்தில் குமரிக்கடலில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை உள்ளது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

Update: 2018-05-25 10:09 GMT

சென்னை

சென்னை வானிலை ஆய்வு இயக்குனர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் இன்று முதல் தொடங்கியுள்ளது . 48 மணி நேரத்தில் குமரிக்கடலில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை உள்ளது. கன்னியாகுமரி, லட்சத்தீவு, கேரளா கடல் பகுதிக்கு மே 30 வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். அடுத்த 48 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறினார்.

மேலும் செய்திகள்