தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி பத்தாம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி பத்தாம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டு உள்ளது.
சென்னை,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டதால் உயர் கல்விக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள். இந்நிலையில் மூன்று மாவட்டங்களிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டீப்பிற்கான உரிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவர்கள், பெற்றோர்கள் பதற்றம் கொள்ள வேண்டாம், 3 மாவட்டங்களில் அமைதி திரும்பிய அடுத்த நாளில் இருந்து 3 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.