தூத்துக்குடி சம்பவம்: தமிழகம் முழுவதும் ச.ம.க. நாளை ஆர்ப்பாட்டம் சரத்குமார் அறிவிப்பு
தூத்துக்குடி சம்பவம்: தமிழகம் முழுவதும் ச.ம.க. நாளை ஆர்ப்பாட்டம் சரத்குமார் அறிவிப்பு
சென்னை,
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் (ச.ம.க.) ஆர்.சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘ஸ்டெர்லைட்’ ஆலை எதிர்ப்பிற்கான 100-வது நாள் போராட்டத்தில் உணர்வுப்பூர்வமாகவும், தன்னெழுச்சியாகவும் திரண்ட மக்களை அடக்கு முறையை கையாண்டு, துப்பாக்கிச்சூடு நடத்தி பலரது உயிரிழப்பிற்கும், நூற்றுக்கணக்கான மக்கள் உயிருக்கு போராடுவதற்கும் காரணமான தமிழக அரசையும், காவல்துறையின் அராஜக வன்முறைப் போக்கையும் கண்டித்து 25-ந்தேதி (நாளை) தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ச.ம.க.வின் நிர்வாகிகள், தொண்டர்கள், உறுப்பினர்கள் அனைவரும், தமிழக அரசு மற்றும் காவல் துறையை கண்டித்து நமது எதிர்ப்பினை பதிவு செய்ய எழுச்சியோடு உணர்வுப்பூர்வமாக இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இன்னும் 2, 3 தினங்களில் வெளிநாட்டிலிருந்து வந்தவுடன், தூத்துக்குடி வாழ் மக்களுடன் சேர்ந்து களத்தில் போராடுவேன். மேலும் ச.ம.க.வினர் உங்களுக்கு ஆதரவாக என்றும் துணை நிற்போம் எனவும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை எந்த சக்தி எதிர்த்தாலும் இறுதிவரை உறுதியாக போராடுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.