பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு டி.டி.வி.தினகரன் கண்டனம்
பெட்ரோல் – டீசல் விலை உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதல். விலைவாசி உயர்வு அனைத்திற்கும் காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான்.
சென்னை,
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
பெட்ரோல் – டீசல் விலை உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதல். விலைவாசி உயர்வு அனைத்திற்கும் காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வை காரணம் காட்டும் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரியின் விளக்கம் என்பது கண்டனத்திற்குரியது.
தெற்காசியாவிலேயே இந்தியா தான் அதிக அளவு பெட்ரோல் – டீசல் மீதான வரிகளை சுமத்துகிறது. இப்பிரச்சினையில் எடப்பாடி பழனிசாமியின் அரசு வழக்கம்போல் கொஞ்சம்கூட அக்கறை காட்டாமல் உள்ளது. மிகவும் அத்தியாவசியமாகிவிட்ட பெட்ரோல் – டீசலின் மூலம் தங்களின் வரி வருவாயை பெருக்குவதில் முனைப்பு காட்டும் மத்திய, மாநில அரசுகள், தங்கள் போக்கை மாற்றிக்கொண்டு பெட்ரோல் – டீசல் மீதான வரிகளை உடனடியாக குறைத்து மக்களை காக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.