பெண்கள் எங்கிருக்கிறார்களோ அங்கு வெற்றி நிச்சயம் இருக்கும்; ரஜினிகாந்த் பேட்டி

பெண்கள் எங்கிருக்கிறார்களோ அங்கு வெற்றி நிச்சயம் இருக்கும் என சென்னையில் நிருபர்களிடம் ரஜினிகாந்த் பேட்டி அளித்துள்ளார்.

Update: 2018-05-20 06:58 GMT
சென்னை,

சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி செயலாளர்களுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார்.  அதன்பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது, ரஜினி மக்கள் மன்றத்திற்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.  பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நாடுகள் முன்னேறி இருக்கின்றன.

எங்களுடைய கட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  பெண்கள் எங்கிருக்கிறார்களோ அங்கு வெற்றி நிச்சயம் இருக்கும் என்று கூறினார்.

தொடர்ந்து கமலுடன் கூட்டணி பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், கட்சியே இன்னும் தொடங்கவில்லை.  கூட்டணி அமைப்பது பற்றி பின்னர் ஆலோசிக்கப்படும்.

கர்நாடகா விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு தலை வணங்குகிறேன்.  காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை அமல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை.  காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் ஆள போகும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி தீர்ப்பினை மதிக்க வேண்டும்.

கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் ஆளுநர் பாரதீய ஜனதாவிற்கு 15 நாட்கள் அவகாசம் அளித்திருந்தது கேலிக்கூத்து.  சென்னை மெரீனாவில் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு காவல் துறை காரணமின்றி தடை விதிக்காது என்றும் கூறியுள்ளார்.

தேர்தல் பற்றிய கேள்வி ஒன்றிற்கு, எல்லாவற்றிற்கும், எப்பொழுதும் தயாராக இருப்போம் என கூறினார்.

மேலும் செய்திகள்