காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விஜயகாந்த் வரவேற்பு
காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வரவேற்பு அளித்துள்ளார். ..#Vijayakanth #CauveryIssue
சென்னை,
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தமிழக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வரவேற்பு அளித்துள்ளார். இன்று, காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை ஆதரித்து பல்வேறு தரப்பினா் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து வருகின்றனா்.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த கூறியதாவது,
“ காவிரி விகவாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விஜயகாந்த் வரவேற்பு கூடியதுதான்”, காவிரி எந்த மாநிலத்துக்கும் சொந்தமில்லை என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மேலும், “காவிரி வரைவு திட்டம் தமிழகத்திற்கு பயனளிக்க கூடியதாக இருக்க வேண்டும்”. என்று கூறியுள்ளார்.