கர்நாடகாவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

கர்நாடகாவில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது கர்நாடக மக்கள் செய்ய வேண்டிய முடிவாகும்.

Update: 2018-05-14 19:15 GMT
சென்னை

தமிழக அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:–

கர்நாடகாவில் யார் ஆட்சி அமைக்க போகிறார்கள் என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது கர்நாடக மக்கள் செய்ய வேண்டிய முடிவாகும்.

காவிரி விவகாரத்தில் தீர்ப்பிற்கு மத்திய அரசு தலைவணங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

எஸ்.வி.சேகருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் அவர் மீது அரசு நடவடிக்கையை எடுக்கும். திவாகரன்–தினகரன் குடும்ப சண்டை விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. ஆனால் அரசை மிரட்டுவது போல் பேச்சு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்