ஆடிட்டர் குருமூர்த்தி ரஜினிக்கான விளம்பர விரும்பி சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்

ஆடிட்டர் குருமூர்த்தியை ரஜினிக்கான விளம்பர விரும்பி என்றுதான் அழைக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார்.

Update: 2018-05-10 11:17 GMT
சென்னை

சென்னையில் துக்ளக் ஆசிரியர்  குருமூர்த்தி, நிருபர்களுக்கு  பேட்டி அளிக்கும் போது 

தமிழகத்தில் தற்போது தலைமைக்கான வெற்றிடம் உள்ளது. இதை யாரும் மறுப்பதற்கில்லை. கட்சிகளுக்கான தலைவர்கள்தான் தற்போது உள்ளனரே தவிர மக்களுக்கான தலைமை இல்லை என்பதுதான் நிதர்சனம். எனவே, அந்த வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் பூர்த்தி செய்வார் என்று நான் கருதுகிறேன். காரணம் மோடியின் ஆட்சித் திறன், ரஜினிக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு இவை இரண்டும் இணைந்தால் வெற்றி பெறலாம். என கூறினார்.

இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ள  பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி 

 குருமூர்த்தியை ஆடிட்டர், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் உடையவர் என்று அழைக்கிறார்கள் ஆனால் அவரை ரஜினிக்கான விளம்பர விரும்பி என்றுதான் அழைக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். மேலும் ஆடிட்டர் குருமூர்த்தி ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் எந்தப்பதவியிலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்