பல்லவன் ரெயில் தடம் புரண்டது: ரெயில் சேவை பாதிப்பு; பயணிகள் அவதி

காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் ரெயில் திருச்சியில் தடம் புரண்ட நிலையில் ரெயில் சேவை பாதிப்படைந்து உள்ளன. #RailService

Update: 2018-04-25 03:28 GMT
திருச்சி,

காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் விரைவு ரெயில் இன்று காலை திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. திருச்சி ரெயில் நிலையம் அருகே வந்த போது ரெயில் என்ஜின் தடம் புரண்டது.

இதனை தொடர்ந்து ரெயில் என்ஜினை சரி செய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.  என்ஜின் சரி செய்யப்படுவதற்கு சில மணிநேரம் ஆகும் என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

ரெயில் என்ஜின் தடம் புரண்ட நிலையில், ரெயில் சேவை பாதிப்படைந்து உள்ளன.  அந்த வழியே, மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது.

இதேபோன்று திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயில் மற்றும் திண்டுக்கல், ராமேஸ்வரம் பயணிகள் ரெயிலும் ஆங்காங்கே வழியில் நிறுத்தப்பட்டு உள்ளன.  இதனால் பல மணிநேரம் பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் செய்திகள்