நிர்மலா தேவி விவகாரத்தில் உதவிப் பேராசிரியர் முருகன் கைது; சிபிசிஐடி அதிரடி நடவடிக்கை

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த விவகாரத்தில் உதவிப் பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டாா். #NirmalaDevi #Murugan #CBCID

Update: 2018-04-24 12:22 GMT
விருதுநகர்,

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 20-ந்தேதி காவலில் எடுத்தனர்.

25-ந்தேதி பகல் 2 மணி வரை பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்படி விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகனும்  கைது செய்யப்பட்டுள்ளாா். சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி  22மணிக்கு பின்னா் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்து தற்போது அவா் கைது  செய்துள்ளனா்.

மேலும் செய்திகள்