காங்கிரஸ்-திமுக இடையே எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது குஷ்பு பேட்டி
காங்கிரஸ்-திமுக இடையே எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் குஷ்பு கூறிஉள்ளார். #Congress #DMK
சென்னை,
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தவறு செய்தார் என்று காங்கிரஸ் எப்போதும் கூறாது. உச்சநீதிமன்றத்தில் வெளிப்படைத்தன்மை தேவையானது. வெளிப்படைத் தன்மைக்காகவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தலைமை நீதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டுவருகிறது. காங்கிரஸ்-திமுக இடையே எவ்வித கருத்து வேறுபாடும் கிடையாது.
ஜனநாயகத்துக்கு காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் அளித்து வருகிறது. பாஜக சொல்வதை அதிமுக செய்கிறது, என்றார்.