எஸ்.வி.சேகர் மீது பா.ஜனதா நடவடிக்கை எடுக்கவேண்டும் கனிமொழி எம்.பி.

எஸ்.வி.சேகர் மீது பா.ஜனதா நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். #KanimozhiMP

Update: 2018-04-20 19:09 GMT
ஆலந்தூர், 

தி.மு.க. எம்.பி. கனிமொழி, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

எஸ்.வி.சேகர் கருத்துக்கு எனது கண்டனத்தை பதிவு செய்து உள்ளேன். கவர்னர் செய்த ஒரு செயலுக்காகத்தான் எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தோம். அப்படி இருக்கும் சூழ்நிலையில் பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அது அவருடைய சொந்த கருத்து. அதற்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று பா.ஜனதா சொல்வதை ஏற்க முடியாது. இது தவறு என்று நினைத்தால் பாரதீய ஜனதா கட்சி நிச்சயமாக அவர்(எஸ்.வி.சேகர்) மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்