தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிறந்த நாள் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிறந்த நாளையொட்டி எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
16-ந் தேதி (நேற்று) கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனி சாமி மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.
அந்தக் கடிதத்தில், “உங்கள் பிறந்த நாளை முன்னிட்டு எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த தேசத்துக்கும், மக்களுக்கும் நீங்கள் சேவை ஆற்றும்படி உடல் நலனை இன்னும் பல ஆண்டுகளுக்கு உங்களுக்கு வழங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்“ என்று கூறப்பட்டுள்ளது.
தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தனது நன்றியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.