பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி: இந்தியப் பிரதமருக்குப் புரிந்திருக்கும் வைரமுத்து டுவிட்

கருப்பு என்பது சர்வதேச மொழி. இந்தியப் பிரதமருக்குப் புரிந்திருக்கும் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். #CauveryManagementBoard #Vairamuthu

Update: 2018-04-12 12:54 GMT
சென்னை,

காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.   பிரதமர் மோடி, திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியைத் தொடங்கி வைக்க இன்று சென்னை வருகை தந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டுவோம் என்று தமிழக அரசியல்  கட்சியினர் தெரிவித்திருந்தனர்.

அதன் படி இன்று சென்னை வந்த பிரதமர் மோடிக்கு பல்வேறு அமைப்பினர் கருப்பு கொடி போரட்டம் நடத்தினர். சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மணியரசன், தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

கருப்பு என்பது சர்வதேச மொழி. இந்தியப் பிரதமருக்குப் புரிந்திருக்கும்.  காவிரி மேலாண்மை வாரியத்தைக் கட்டி எழுப்புங்கள். அது கர்நாடகத்துக்கு  அநீதி அல்ல; தமிழ்நாட்டுக்கு நீதி என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்