காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கத் தயார்
காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கத் தயார் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். #CauveryIssue #MKStalin;
தஞ்சாவூர்,
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று 2-வது நாள் பயணத்தை தஞ்சையை அடுத்த சூரக்கோட்டையில் இருந்து தொடங்கினார். தொடர்ந்து அவர் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியாக பட்டுக்கோட்டை சென்றார்.
முன்னதாக திருவோணத்தை அடுத்த வெட்டிக்காடு கிராமத்தில் மு.க. ஸ்டாலின் வேனில் இருந்து இறங்கி தரிசாக கிடந்த நிலத்தை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளையும் கேட்டறிந்தார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விவசாய சங்க தலைவர் திருச்சி அய்யாக்கண்ணு ஆகியோரும் உடன் சென்றனர்.
சில்லத்தூரில் விவசாயி கள், கிராம மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது, தடை செய்யப்பட்ட இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட என் மீதும் எல்லா கட்சிகளின் தலைவர்கள் மீதும் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளை எல்லாம் பார்த்து நாங்கள் அஞ்சி, நடுங்கி, ஒடுங்கி விடப்போவதில்லை.
இந்த வழக்குகளால், ஒரு மாதம் இரண்டு மாதம் ஒரு வருடம் மட்டுமல்ல, காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்காக வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கவும் தயாராக இருக்கிறோம்.
இந்த மண்ணின் மைந்தனாக உங்களிடத்தில் உரையாற்றுகிறேன். இந்தப் பயணம் கிளம்புவதற்கு முன்பாக, தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெறச் சென்றேன். பயண விவரங்களை எல்லாம் அவரிடம் தெரிவித்தபோது, எனது கையை பிடித்துக் குலுக்கி சிரித்தார். “என்னை வாழ்த்துங்கள் அப்பா”, என்று நான் கேட்டதும், எனது தலையில் கையை வைத்து வாழ்த்தினார்.
காவிரி பிரச்சினை என்றதும், உடல் நலிவுற்ற நிலையிலும் தன்னையும் அறியாமல், தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்’ என்று சொல்வதுபோல, தலைவர் கருணாநிதி தனது உணர்ச்சியை வெளிப்படுத்தினார். எனவே, அவருடைய வாழ்த்துகளுடன் இந்தப் பயணத்தை தொடங்கியிருக்கிறோம்.
பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும் நேரத்தில், அவருக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருக்கிறோம். வருகிற 12-ந்தேதி பிரதமர் தமிழ்நாட்டுக்கு வருவதாக தெரிய வந்திருக்கிறது. நாம் கருப்புக்கொடி காட்டுவதால், ஒருவேளை சாலையில் வராமல், விமானம் மூலம் மேலேயே பறந்து வந்து நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அப்படியே திரும்புவதாகவும் செய்தி வந்திருக்கிறது. எது எப்படி நடந்தாலும், நாங்கள் அறிவித்தபடி கருப்புக்கொடி காட்டுவது உறுதி.
இன்று காலையில் அனைத்து கட்சி தலைவர்களிடம் பேசியபோது, நாங்கள் முடிவெடுத்தபடி, பிரதமர் வரும்போது கருப்புக்கொடி காட்டுவது மட்டுமல்ல, அவர் வரும் நாளில் அனைவரும் கருப்பு உடையணிந்து நம்முடைய வேதனையை, கண்டனத்தையும் வெளிப்படுத்தவேண்டும். மேலும் ஒவ்வொருவரும் உங்கள் வீட்டில் கருப்புக்கொடி ஏற்றி வைக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலை 5 மணிக்கு பட்டுக்கோட்டையில் இருந்து பயணத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின் பல்வேறு கிராமங்கள் வழியாக சென்று இரவு தஞ்சையில் தங்கினார்.
இன்று (திங்கட்கிழமை) தஞ்சை வடக்கு மாவட்டத்தில் உள்ள அன்னப்பன்பேட்டையில் இருந்து 3-வது நாள் பயணத்தை தொடங்கும் மு.க.ஸ்டாலின் இரவு திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் பயணத்தை நிறைவு செய்கிறார்.