தமிழகத்தில் மாற்றம் கொண்டுவர முயற்சி செய்து வருகிறோம் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
தமிழகத்தில் மாற்றம் கொண்டுவர முயற்சி செய்து வருகிறோம் என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஆலந்தூர்,
சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தபோது அ.தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என தி.மு.க. கோரிக்கை விடுத்தது.
தற்போது காவிரி விவகாரத்துக்காக நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்பட வேண்டும் என்று தி.மு.க. ஏன் சொல்லவில்லை. சொல்ல தயங்குவது ஏன்?
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க., தி.மு.க. போராட்டம் நடத்துகின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சியினர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர். தமிழர்களுக்காக போராடுவதாக சொன்னால் இதற்கு காங்கிரஸ் கட்சியினர் பதில் சொல்ல வேண்டும்.
தி.மு.க. கூட்டணி கட்சியினர் நடத்த வேண்டிய பாதயாத்திரை காவிரி டெல்டா பகுதிகளை நோக்கி அல்ல. பெங்களூருவை நோக்கி நடத்தி இருந்தால் தி.மு.க.வுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் பாராட்டு தெரிவித்து இருப்பேன். இது அரசியலுக்காக நடத்தக்கூடிய பாதயாத்திரை. தமிழர்களுக்கானது அல்ல.
கர்நாடக காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆதரவாக உள்ளனர். தமிழகத்துக்கு ஏன் ஆதரவாக இல்லை என்று திருநாவுக்கரசர் கேட்டுள்ளாரா? இவர்கள் கட்சியின் நலனுக்காக அரசியல் ஆதாயத்துடன் உள்ளனர். பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்டினால் அது தமிழர்களுக்கு எதிரானது. இதுவரையில் வந்த பிரதமர்களில் மோடி தான் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தந்தவர்.
இதுவரை வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் துணைவேந்தர்களாக இருந்தது கிடையாதா? தமிழர்கள் வேறு மாநிலங்களில் துணைவேந்தர்களாக இருந்தது இல்லையா? தமிழர்களின் மானத்தை காப்பாற்ற எங்களுக்கு தெரியும். நாங்களும் தமிழர்கள்தான். தமிழகத்தில் மாற்றம் கொண்டுவர நாங்கள் முயற்சி செய்துவருகிறோம். மாற்றத்தை கொண்டுவந்தே தீருவோம். இவ்வாறு அவர் கூறினார்.