புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் சென்னையில் காலமானார்

புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் சென்னையில் காலமானார்.;

Update:2018-03-20 03:42 IST
சென்னை, 

புதிய பார்வை ஆசிரியரும், சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

தற்போது அவர் நுரையீரல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் கடந்த 16-ந்தேதி முதல் சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவித்தது.

செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை பெறும் அவருடைய சிறுநீரகங்கள் செயல் இழந்து விட்டன. இதனால் அவருக்கு ‘டயாலிசிஸ்’ சிகிச்சையும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி நடராஜன் உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்