பி.எச். பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் மறைவு; முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் இரங்கல்

முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் மறைவுக்கு முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #Speaker;

Update:2018-01-21 10:37 IST
சென்னை,

தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன்.  இவர் கடந்த 2005ம் ஆண்டு முதல் 2008 வரை நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றியுள்ளார்.

கடந்த சில நாட்களாக இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.  இந்நிலையில் அவர் மரணம் அடைந்து உள்ளார்.  அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

அவரது மறைவுக்கு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி முதல் அமைச்சர் பழனிசாமி விடுத்துள்ள செய்தியில், சிந்தியா மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.  எம்.ஜி,ஆர்., ஜெயலலிதா ஆகியோரிடம் நன்கு அறிமுகம் ஆனவர் அவர் என தெரிவித்துள்ளார்.

இதேபோன்று துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விடுத்துள்ள செய்தியில், சிந்தியாவின் மறைவு எங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பு.  பி.எச். பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.
#Speaker #latesttamilnews

மேலும் செய்திகள்