ஆர்.கே.நகரில் திமுகவினரின் வாக்குகளையும் பணம் சாப்பிட்டுவிட்டது என திமுக விமர்சனம்

ஆர்.கே.நகரில் திமுகவினரின் வாக்குகளை பணம் சாப்பிட்டுவிட்டது என திமுக விமர்சனம் செய்து உள்ளது.

Update: 2017-12-24 08:52 GMT


சென்னை, 


ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்து உள்ளார். அவருடைய வெற்றியை அவருடைய தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவிற்கு கிடைத்த வாக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. திமுக வெற்றியடையும் என திமுக தொண்டர்கள் பெரும் நம்பிக்கையில் இருந்தனர், திமுக வெற்றியடையும் எனவும் கூறப்பட்டது. 

ஆனால் திமுக இடைத்தேர்தலில் மூன்றாவது இடத்தையே பெற்று உள்ளது. அதுவும் அதிமுக வேட்பாளரைவிட 10000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக பின்தங்கி உள்ளது தொண்டர்களை கடும் சோகத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

இந்நிலையில் ஆர்.கே.நகரில் திமுகவினரின் வாக்குகளை பணம் சாப்பிட்டுவிட்டது என திமுக விமர்சனம் செய்து உள்ளது.

திமுகவை சேர்ந்த துரைமுருகன் பேசுகையில், திமுகவினரின் வாக்குகளையும் பணம் சாப்பிட்டுவிட்டது. ஆர்.கே.நகரில் ஜனநாயகம் வெற்றிபெறவில்லை, பணநாயகம் வென்று உள்ளது என விமர்சனம் செய்து உள்ளார். 

மேலும் செய்திகள்