ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழக பா.ஜனதாவின் சாதனை! சுப்பிரமணிய சாமி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜனதா சாதனை படைத்து உள்ளது என அக்கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சாமி விமர்சனம் செய்து உள்ளார்.
சென்னை,
ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் 21-ந்தேதி வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் இருந்து சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் பெரும்வாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். இத்தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் கரு.நாகராஜன் களமிறக்கப்பட்டார். வாக்கு எண்ணிக்கையில் பாரதீய ஜனதா கட்சியைவிட நாம் தமிழர் கட்சி அதிகமான வாக்குகளை பெற்று உள்ளது, நோட்டோவிற்கு அதிகமான வாக்குகள் கிடைத்து உள்ளது.
இந்நிலையில் பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி அக்கட்சியின் செயல்பாட்டை விமர்சனம் செய்து உள்ளார்.
சுப்பிரமணியன் சாமி டுவிட்டரில் பதிவிட்டு உள்ள செய்தியில், “தமிழகத்தில் பா.ஜனதா சாதனை படைத்து உள்ளது. மத்தியில் ஆளும் தேசியக்கட்சிக்கு இடைத்தேர்தலில் நோட்டோவிற்கு கிடைத்த ஓட்டுகளில் கால்வாசி மட்டுமே கிடைத்து உள்ளது. இது பொறுப்பை உணர வேண்டிய தருணம்,” என குறிப்பிட்டு உள்ளார்.
4-ம் சுற்று முடிவுகள்:-
டிடிவி தினகரன் (சுயேச்சை) - 20,298
மதுசூதனன் (அதிமுக) - 9,672
மருதுகணேஷ் (திமுக) - 5,091
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 962
கரு. நாகராஜன் (பாஜக)- 318
நோட்டா- 453
மூன்றாம் சுற்று முடிவுகள்:-
டிடிவி தினகரன் (சுயேச்சை) - 15,868
மதுசூதனன் (அதிமுக) - 7,033
மருதுகணேஷ் (திமுக) - 3,691
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 737
நோட்டா- 333
கரு. நாகராஜன் (பாஜக)- 220