4வது சுற்றில் தினகரன் 10,626 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் 4வது சுற்று முடிவில் 10,626 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலை வகித்து வருகிறார்.
ஆர்.கே. நகர்,
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
இதில் நடந்து முடிந்த முதல், 2வது சுற்று மற்றும் 3வது சுற்று முடிவுகளின் அடிப்படையில் சுயேட்சை வேட்பாளர் தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தொடர்ந்து 4வது சுற்று எண்ணிக்கை நடந்தது.
இதன் முடிவில் 10,626 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். அவர், 20,298 வாக்குகளை பெற்றுள்ளார்.
அவருக்கு அடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் 9,672 வாக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.
இதனை தொடர்ந்து தி.மு.க.வின் மருதுகணேஷ் 5,032 வாக்குகளுடன் 3வது இடத்திலும், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 962 வாக்குகளுடன் 4வது இடத்திலும் மற்றும் பாரதீய ஜனதாவின் கரு. நாகராஜன் 318 வாக்குகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.
மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 1,76,885 ஆகும். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.