ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: முதல் சுற்று முடிவில் 5 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று டி.டி.வி. தினகரன் முன்னிலை
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முதல் சுற்று முடிவில் 5 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று டி.டி.வி. தினகரன் முன்னிலை வகிக்கிறார்.;
ஆர்.கே. நகர்,
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் முன்னிலை வகித்து வருகிறார். அவர் 5,339 வாக்குகளை பெற்றுள்ளார்.
அவரை தொடர்ந்து அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் 2,738 வாக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.
இதனை தொடர்ந்து தி.மு.க.வின் மருதுகணேஷ் 1,181 வாக்குகளுடன் 3வது இடத்திலும், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 258 வாக்குகளுடன் 4வது இடத்திலும் மற்றும் பாரதீய ஜனதாவின் கரு. நாகராஜன் 66 வாக்குகளுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.
மொத்தம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 1,76,885 ஆகும். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.