தொண்டர்களின் நிம்மதிக்காகவே ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிடப்பட்டது-ஜெயானாந்த்

தொண்டர்களின் நிம்மதிக்காகவே ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிடப்பட்டது என சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானாந்த் கூறி உள்ளார்.

Update: 2017-12-20 12:08 GMT
சென்னை

சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெயலலிதா மரணம் குறித்து தவறான தகவல் வெளியிடப்பட்டதால் வெற்றிவேல் இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார். வீடியோவை வெளியிட்டத்தை சசிகலா ஏற்று கொள்வார்.

வீடியோ வெளியிட்டத்தை எங்களது குடும்பத்தைச் சேர்ந்த  சிலர் தவறு என்று கூறி உள்ளார்கள். ஒரு சிலர் தவறு என கூறுவது  முக்கியமா? தொண்டர்களின் நிம்மதி முக்கியமா?

வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து சர்வதேச அளவில் ஆய்வு நடத்தலாம். வீடியோ வெளியிட்டது குறித்து சசிகலா, தினகரனுக்கு தெரியாது.

என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்