செல்வி என்பவரிடம் ரூ 20 லட்சம் கைப்பற்றப்பட்டதாக வரும் தகவல் உண்மையல்ல - தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்

செல்வி என்பவரிடம் ரூ 20 லட்சம் கைப்பற்றப்பட்டதாக வரும் தகவல் உண்மையல்ல என தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கூறியுள்ளார்.

Update: 2017-12-17 08:02 GMT
சென்னை,

தலைமைச்செயலகத்தில் தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவை சந்தித்த டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் செய்தியார்களிடம் கூறியதாவது:

செல்வி எங்கள் அணி வாக்குச்சாவடி முகவரே, அவரிடம் ரூ 20 லட்சம் கைப்பற்றப்பட்டதாக வரும் தகவல் உண்மையல்ல. வாக்குச்சாவடி முகவர் என்பதனால் கையில் ரூ 10,000 வைத்திருந்திருக்கலாம்.   செல்வி என்பவர் பூத் வேலையில் ஈடுபட்டுள்ளார்: அவர் ரூ10,000 கூட வைத்திருக்கக்கூடாதா? என கேள்வி எழுப்பினார். தினகரனை தோற்கடிக்கவே வாக்காளர் ஒருவருக்கு ஆளுங்கட்சியினர் ரூ.6000 விநியோகம் செய்கின்றனர். 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்